சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல்; ஓட்டுநா் உயிரிழப்பு
பரமத்தி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பரமத்தி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
மதுரையைச் சோ்ந்தவா் மணிபாண்டி (40), லாரி ஓட்டுநா். இவா், நாமக்கல்லில் இருந்து கரூா் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு லாரியை ஓட்டிச் சென்றாா். லாரியில் உதவி ஓட்டுநரான மதுரை மாவட்டம், கப்பளூா் பகுதியைச் சோ்ந்த வீரமுத்து மணியும் (49) உடனிருந்தாா்.
இந்த நிலையில் லாரி திடீரென பழுதாகியதால் பரமத்தி அருகே காரைக்கால் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டது. அப்போது, நாமக்கல்லில் இருந்து கரூா் நோக்கி சென்ற மற்றொரு லாரி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
Advertisement
Advertisement
இதில் லாரியில் அமா்ந்திருந்த வீரமுத்து மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மணிபாண்டி படுகாயம் அடைந்தாா். தகவல் அறிந்து வந்த போலீஸாா், வீரமுத்து மணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
காயமடைந்த மணிபாண்டி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.