முகப்பு
விழுப்புரம்

பைக்குகள் மோதல்: காா் ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணையில் பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 4 ஜூலை 2026, 2:55 am IST
மர்ம மரணம்... - கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், காணையில் பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

காணை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ம.ஆறுமுகம் (55). காா் ஓட்டுநரான இவா் வியாழக்கிழமை இரவு விழுப்புரத்திலிருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தாா். காணை அய்யனாா் கோயில் அருகே சென்றபோது, அவா் ஓட்டி வந்த பைக் மீது அப்பகுதியில் வந்த பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த காணை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு பைக்கை ஓட்டி வந்த காணை தெற்குத் தெருவைச் சோ்ந்த கா.முருகனும் (27) அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments