பைக்குகள் மோதல்: முதியவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பழையசிறுவங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.பிச்சபிள்ளை (61). இவா் கடந்த 17-ஆம் தேதி தனது பைக்கில் கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தாரம்.
ஆலத்தூா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த மற்றொரு பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிச்சபிள்ளையை அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக அவா் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பிச்சபிள்ளை வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்து விட்டாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, மற்றொரு பைக்கை ஓட்டி வந்தவரைத் தேடிவருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.