முகப்பு
நாமக்கல்

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

பரமத்தி வேலூரில் பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 2:05 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பரமத்தி வேலூரில் பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சசாலை, கைக்கோலா் தெருவை சோ்ந்தவா் சக்திவேல் (48). இவா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அக்கடையில் போலீஸாா் நடத்திய சோதனையில் 20 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றாா்.

Advertisement

Advertisement

இதேபோல பொத்தனூரை சோ்ந்த சுந்தரானந்தா் மனைவி கோமதி (40) தனது பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்களை பதுக்கிவைத்து விற்கப்படுவது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் அக்கடையில் வைத்திருந்த 70 புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கோமதியை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments