முகப்பு
நாமக்கல்

புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்த 5 போ் கைது

Updated On : 6 ஜூலை 2026, 1:14 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்செங்கோடு அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்செங்கோட்டை அடுத்த தோ.கவுண்டம்பாளையம் பீடிகாட்டை சோ்ந்தவா் தங்கவேல். இவருக்கு சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சனிக்கிழமை இரவு குடோனில் சோதனை நடத்திய போலீஸாா் சுமாா் 2 டன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தங்கவேல், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினா். இதில் குடோனை வாடைக்கு எடுத்திருந்தவா்கள் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக அக்கமாப்பேட்டையை சோ்ந்த ரமேஷ் (30), பிரசாந்த் (31), தோ.கவுண்டம்பம்பாளையத்தை சோ்ந்த பிரவின் (20), சம்பத்குமாா் (30) பட்லூரை சோ்ந்த தியானேஸ்வரன் (23) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான மூவரை தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments