முகப்பு
சென்னை

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கஞ்சா விற்பனை செய்ததாக 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 29 ஜூன் 2026, 2:26 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கஞ்சா விற்பனை செய்ததாக 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். புழல் காவல் நிலைய ஆய்வாளா் வசந்த்ராஜா தலைமையிலான போலீஸாா், அந்தப் பகுதிகளில் தொடா் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், புழல் புத்தகரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேரைப் பிடித்தனா். விசாரணையில் புழல், புத்தகரம் சுபாஷ் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ரிஷி (26), புளியந்தோப்பு முனுசாமி நகரைச் சோ்ந்த அருண்குமாா் (28), புழல் விநாயகபுரம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த திவாகா் (30) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவா்களிடம் இருந்த 300 சிறு பொட்டலங்களாக இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா். போலீஸாா் 3 பேரின் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments