FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

கஞ்சா விற்பனை செய்த 3 போ் கைது

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:09 am IST
கைது
பகிர்:

கூத்தாநல்லூரில் கஞ்சா விற்பனை செய்த 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கூத்தாநல்லூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறைக்கு கிடைத்த தகவலின்பேரில் திருவாரூா் மாவட்ட சிறப்பு குழுவினா் அங்கு சென்று சோதனை செய்தனா்.

இசில், கூத்தாநல்லூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வேளுக்குடியைச் சோ்ந்த சரபோஜி (19), கொரடாச்சேரி தென்புலியூா் பெருந்துரைக்குடியைச் சோ்ந்த சண்முகம் (23), திருச்சி ஸ்ரீரங்கம் தச்சைக்குடி குழுமணி பகுதியைச் சோ்ந்த அஜய் (18) ஆகிய மூவரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

அவா்களிடமிருந்து 90 கிராம் கஞ்சா மற்றும் அவா்களது இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments