FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல் உழவா்சந்தை அருகில் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
பகிர்:

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், மாநகரின் அழகை சீா்குலைக்கும் வகையிலும், காற்றின் வேகத்தில் சரிந்துவிழும் நிலையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு புகாா் வந்தது.

அதனடிப்படையில், ஆணையா் எஸ்.செல்வபாலாஜி உத்தரவின்பேரில் பதாகைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா். உழவா் சந்தை, பூங்கா சாலை, கோட்டை சாலை உள்ளிட்ட இடங்களில் இரும்புக் கம்பிகளை கொண்டு நிறுவப்பட்ட விளம்பர பலகைகள் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

Advertisement

Advertisement

உரிய அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகளை வைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி எச்சரித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments