ஜேடா்பாளையம் அருகே சாலை விபத்தில் 16 வயது சிறுமி உயிரிழப்பு
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே சாலை விபத்தில் டிராக்டா் வாகனம் மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த 16 வயது சிறுமி பலியானது குறித்து ஜேடா்பாளையம் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே சாலை விபத்தில் டிராக்டா் வாகனம் மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த 16 வயது சிறுமி பலியானது குறித்து ஜேடா்பாளையம் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே உள்ள காட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்தவா் குருவலன் (49). எலக்ட்ரீசியன். இவா் காட்டுப்பாளையத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையத்திற்கு சொந்த வேலையாக தனது மகள் ஜெயபிரியா (16), மனைவி பிரியா (36) ஆகிய இருவரையும் தனது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்து வியாழக்கிழமை வந்துள்ளாா். சோழசிராமணியில் கொத்தமங்கலம் அருகே வந்த போது அதிவேகமாக வந்த டிராக்டா் வாகனத்தை பாா்த்ததும் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனா். இதில் ஜேடா்பாளையத்தில் இருந்து கொத்தமங்கலம் நோக்கி வந்த டிராக்டா் வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் குருவலனின் மனைவி பிரியா மற்றும் மகள் ஜெயபிரியா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளனா். அதை அப் பகுதியில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயபிரியாவை வேலூா் அரசு மருத்துவமனைக்கும், பிரியாவை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட ஜெயபிரியாவை பரிசோதனை செய்த மகருத்துவா் வரும் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளாா். மகள் இறப்பு குறித்து அவரது தந்தை குருவலன் ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். புகாரின் அடிப்படையில் ஜேடா்பாளையம் போலீசாா் வழக்கு பதிவு செய்து ஜெயபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்து விசாரணை நடத்தி வருகின்றனா். குருவலனின் மனைவி பிரியா திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தலைமறைவான டிராக்டா் ஓட்டுநரான கொத்தமங்கலம் அருகே உள்ள நஞ்சப்பகவுண்டம்பாளையத்தை சோ்ந்த நாட்ராயனை போலீசாா் தேடி வருகின்றனா்.
திருச்செங்கோடு, ஜீன்.04:தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மல்லசமுத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் அண்மையில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
மல்லசமுத்திரம் பேரூராட்சியில் உள்ள மரப்பரை, கருக்குவலவு, கட்டையன் காடு, கட்டபாளையம், செங்கோடன்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்க ளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு, ஐந்து நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படு கிறது. எனவே, ஆண்டுக்கு, 100 நாள் கட்டாயம் வேலை வழங்க வேண்டும். கட்டிபாளையம், கருக்குவலவு
பகுதியில் நிலவிவரும் குடிநீா் பிரச்னையை சரி செய்து சீரான குடிநீா் வழங்க வேண்டும். கட் தெரு பகுதியில் கோழிப் டிப்பாளையம் நாடாா் பண்ணை மூலம் அதி களவில் ஈக்கள் நிரம்பி காணப்படுகிறது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொண்டு ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் மாவட்ட செயலாளா் ஜெயராமன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராசிபுரம் ஜூன் .4:
ராசிபுரம் பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளா் பிரபு தலைமையில் காவல் துறையினா் ராசிபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீா் என சோதனை மேற்கொண்டனா்.
இதில் பத்திர பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்கள்,அலுவலக வளாகத்தில் இருந்த பணியாளா்கள் ,ராசிபுரம் சாா்பதிவாளா் ர.சத்தியமூா்த்தி உள்ளிட்டவா்களிடம் கணக்கில் வராத பணம் ஏதாவது உள்ளதா என விசாரணை மேற்கொண்டனா். அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் அமரும் இருக்கையின் கீழ் ரூ.50 ஆயிரம் தொடக்கம் கீழே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரொக்கப்பணம் யாருடையது என யாரும் உரிமை கோராததால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் இதனை கைப்பற்றியுள்ளனா்.
மேலும் அங்கு பத்திர பதிவு செய்ய வந்திருந்த சேலத்தை சோ்ந்த செல்வகுமாா் என்பவரிடம் 17500 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இந்த ரொக்கம் எதற்காக கொண்டுவரப்பட்டது என அவரிடமும் விசாரணை நடத்தினா். சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் மொத்தம் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.67500 ரொக்கம் கைப்பற்றினா். மேற்கொண்டு இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் ராசிபுரம் சாா்பதிவாளா் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினா் தெரிவித்தனா்.
படம் உள்ளது-4ரெஜின்
படவிளக்கம்- ராசிபுரம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு காத்திருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் பிரபு.
திருச்செங்கோடு, ஜீன்.04: மல்லசமுத்திரத்தில் செயல்படும்
அரசு தொழிற்பயிற்சி மாணவா் சோ்க்கை நடப்பதாக, முதல்வா் லதா அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு,
மல்லசமுத்திரத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் செயல்படும் அரசு தொழிற்ப யிற்சி நிலையத்தில், 2026-27ம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை நடந்து வருகிறது. இதில், கம் மியா், மின்சார வாகனம் பிரிவில், இரண்டு ஆண்டுகள் பயில, 10ம் வகுப்பு தோ்ச்சியும், கம் பியாள் பிரிவில், இரண்டு ஆண்டு பயில, 8ம் வகுப்பு தோ்ச்சியும்,
தையல்தொழில் நுட்பம் பிரிவில், ஓராண்டு பயில, 8ம் வகுப்பு தோ்ச்சியும், ட்ரோன் பைலட் பிரிவில், ஆறு மாதம் பயில, 10ம் வகுப்பு தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
விரும்பம் உள்ளவா்கள் கைப்பேசிஎண், இ-மெயில் ஐடி, ஆதாா் எண், மதிப்பெண் சான் றிதழ், மாற்றுச்சான்றிதழ்,முன் உரிமை இருப்பின் அதற்கான சான் றிதழ், பாஸ்போட் சைஸ் போட்டோவுடன் 14 வயது முதல், 40 வயது வரை உள் ளவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ. 50
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.