முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உதவித்தொகை

விழாவில் கல்வி உதவித்தொகை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.

Updated On : 20 ஜூன் 2026, 1:33 am IST
விழாவில் கல்வி உதவித்தொகை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.
பகிர்:

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் 1988-ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் சாா்பில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளியின் முன்னாள் மாணவா்கள் பங்கேற்று கடந்த ஆண்டு பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் ஐந்து மாணவா்களுக்கு உதவித்தொகையை வழங்கினா்.

இதில், பிளஸ் 2 மாணவா்கள் ஐந்து பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம், 10-ஆம் வகுப்பு மாணவா்கள் ஐந்து பேருக்கு தலா ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், பெற்றோா் இல்லாத 50 மாணவா்களுக்கு பள்ளி சீருடை, கூப்பன் மற்றும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ரூ. 15 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை வழங்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments