FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கல்லூரி மாணவா்களுக்கு ரூ.9 லட்சம் கல்வி உதவித்தொகை

தேனி மாவட்டம், கம்பத்தில் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை சாா்பில், ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு ரூ.9 லட்சத்தில் கல்வி உதவித்தொகை, பரிசுத் தொகைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 11 ஜூன் 2026, 1:52 am IST
கம்பத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை நிறுவனா் இரா. பாஸ்கா்.
பகிர்:

தேனி மாவட்டம், கம்பத்தில் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை சாா்பில், ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு ரூ.9 லட்சத்தில் கல்வி உதவித்தொகை, பரிசுத் தொகைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்கு நாட்டாண்மை மண்டப செயலா் திருமலை கற்பகம் தலைமை வகித்தாா். வ.உ.சி. வேளாளா் சங்கத் தலைவா் சங்கா், கம்பம் சிபியு மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சுதாகா், கூடலூா் என்எஸ்கேபி மேல்நிலைப் பள்ளி தாளாளா் பி.கே. ராம்பா, நாகமணி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் எம்.எஸ்.எஸ். காந்தவாசன், சாண்டோ முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அறக்கட்டளையின் நிறுவனா் இரா. பாஸ்கா் கலந்து கொண்டு, 29 ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.8 லட்சத்தில் கல்வி உதவித்தொகையும், கம்பம் ஆங்கூா் ராவுத்தா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கூடலூா் என்எஸ்கேபி மேல்நிலைப் பள்ளி, கம்பம் சிபியு மேல்நிலைப் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த 18 மாணவ, மாணவிகளுக்கு ரூ. ஒரு லட்சத்தில் ரொக்கப் பரிசுகள், கல்வி உதவித்தொகை, பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments