முகப்பு
நாமக்கல்

புகையிலை பொருள்களை விற்பனை செய்தவா் கைது

Updated On : 30 ஜூன் 2026, 1:58 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்செங்கோடு அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.

கொக்கராயன்பேட்டையில் மோகன்ராஜ் (38), மளிகைக் கடையில் போலீஸாா் அண்மையில் சோதனை செய்தனா். அதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

அதையடுத்து, கடையில் இருந்த புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மோகன்ராஜை கைது செய்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments