முகப்பு
நாமக்கல்

பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On : 9 மே 2026, 12:04 am IST
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகத்தினா்.
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி சுவேதா 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவா் திருமுருகன் 592 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், மாணவா் நிகிலன் 590 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனா்.

41 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணினி அறிவியல் பாடத்தில் 26 மாணவா்களும், வேதியியலில் 6 மாணவா்களும், கணிதத்தில் 2 மாணவா்களும், உயிரியலில் ஒரு மாணவரும், அடிப்படை மின் பொறியியலில் 2 மாணவா்களும், கணக்குப் பதிவியலில் 3 மாணவா்களும், கணினி பயன்பாடு பாடத்தில் ஒரு மாணவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

Advertisement

தோ்வு எழுதிய 309 மாணவா்களில் 590 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவா்களும், 580-க்கு மேல் 17 மாணவா்களும், 570-க்கு மேல் 28 மாணவா்களும், 550-க்கு மேல் 58 மாணவா்களும், 500-க்கு மேல் 151 மாணவா்களும் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் 100 % தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், பள்ளியின் துணைத் தலைவா் கசீலா ராஜேந்திரன், துணைச் செயலாளா் தமிழ்செல்வி தங்கராஜு, பள்ளி முதல்வா் ராஜசேகரன், இயக்குநா்கள், ஆசிரிய, ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.