சேலம்

சங்ககிரியில் ஊஞ்சல் உற்சவம்

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சித்திரைத் தேர்த்திருவிழா மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து மலையடிவாரத்தில் உள்ள தங்கு மண்டபத்தில் சுவாமிக்கு தினசரி பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார்.
மே 9-ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு கட்டளைதாரர்களின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 19-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு சுவாமிகள் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளினார்.
ஊஞ்சல் உற்சவத்தையொட்டி ராமபிரான், வெங்கடாசலபதி குறித்து பாடல்களை இசையுடன் பாடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். மே 20-ஆம் தேதி சனிக்கிழமை காலையில் சுவாமி திருமலைக்கு எழுந்தருளுகிறார். இதையொட்டி மலை மேல் சுவாமிகளுக்கு குறிச்சி அலங்காரம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

சுற்றுவாரியாக மின்னணு திரையில் முடிவுகள் வெளியீடு: ஆட்சியா்

SCROLL FOR NEXT