சேலம்

வாழப்பாடி கே.கே. ஜூவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா 

தினமணி

வாழப்பாடியில், 25 ஆண்டுகளாக இயங்கி வரும் கே.கே. ஜூவல்லரி நகைக்கடையின், புதிய ஹால்மார்க் ஷோரூம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வாசவி மஹால் வளாகத்தில், 25 ஆண்டுகளாக கே.கே. ஜூவல்லரி நடைக்கடை இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் ஆதரவோடு வெள்ளிவிழா கண்ட அந்நிறுவனத்தின் குளிரூட்டப்பட்ட புதிய ஹால்மார்க் ஷோரூம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விழாவிற்கு, கே.கே.ஜூவல்லரி உரிமையாளர், சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவைப் பொருளாளரும், மாவட்ட வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவருமான குபாய் (எ) குபேந்திரன் வரவேற்றார்.
 அவரது மனைவி ஜெகதா குபேந்திரன் குத்துவிளக்கேற்றினார். மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர். இளங்கோவன் புதிய ஷோரூமை திறந்து வைத்து, முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.
 விழாவில், கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் காமராஜ், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் சேலம் வெங்கடாஜலம், ஆத்துôர் சின்னதம்பி, ஏற்காடு சித்ரா, சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் சதீஸ்குமார் ஆகியோர், வாடிக்கையாளர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
 அ.தி.மு.க., நகரச் செயலாளர் என்.சிவக்குமார், அரிமா சங்க பட்டயத் தலைவர் எம். சந்திரசேகரன், மருத்துவர்.மோதிலால், தொழிலதிபர் டி.வி.எஸ்.முரளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 விழாவில் பங்கேற்றவர்களுக்கு கே.கே. ஜூவல்லரி உரிமையாளர் குபாய் (எ) குபேந்திரன், அவரது மனைவி ஜெகதா குபேந்திரன், மகன்கள் கே.ஜே. விஷ்ணு, கே.ஜே. கிரண் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT