சேலம்

நூல் வெளியீட்டு விழா

DIN

சேலம் உத்தமசோழபுரத்தின் உன்னத வரலாறு என்ற நூல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுரநாதர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தம சோழபுரத்தின் உன்னத வரலாறு என்ற கவிமுகில் ராஜசேகர் எழுதிய வரலாற்று நூலை சேலம் வரலாற்றுச் சங்கப் பொதுச் செயலாளர் ஜே. பர்னபாஸ் வெளியிட்டார். 
முதல் பிரதியை தாரை அ.குமரவேலு பெற்றுக் கொண்டார். விழாவையொட்டி  கரபுரநாதர் கோயிலில் நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழ் புலவர் அவ்வையாரின் திருவுருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 
விழாவில் எஸ்.ஜி. சுப்பிரமணியன், காவல் ஆய்வாளர் புஷ்பராணி, மரம் வளர்ப்பு ஆர்வலர் ரங்கராஜ், ஜி.சுல்தான், வரலாற்று நூலாசிரியர் எடப்பாடி அமுதன், அச்சுக் கலைஞர் கார்மேகம், ஏவிஎஸ் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர் சஞ்ஜு ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT