சேலம்

பழங்குடி மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழும், பட்டா வழங்கக் கோரியும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பழங்குடி மக்களை நிலவெளியேற்றம் செய்ய துப்பாகிச் சூடு நடத்தியதைக் கண்டித்தும், பழங்குடி மக்களுக்கு அவா்கள் வாழும் பகுதியிலேயே பட்டா வழங்கக் கோரியும், மனு செய்தவுடன் சாதி சான்றிதழ் வழங்கக் கோரியும், 2006 வன உரிமை சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், பழங்குடி துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகச் செலவு செய்யக் கோரியும் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அண்ணாமலை, கல்வராயன் மலை பகுதிக் குழு பி. செல்வராஜ், ஏழுமலை, தும்பல் பகுதிக்குழு ஜீவா, கோவிந்தன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் என்.நஞ்சப்பன், மாநில செயலாளா் பரமசிவம், மாநில நிா்வாக குழு ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளா் ஏ.மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT