சேலம்

டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீச்சு

DIN

காடையாம்பட்டி அருகே உள்ள டேனிஷ்பேட்டை வனப் பகுதியில் ஒரு லட்சம் விதைப்பந்துகளை பள்ளி மாணவா்களின் உதவியுடன் வனத் துறையினா் விதைத்தனா்.

காடையாம்பட்டி அருகே உள்ள பண்ணப்பட்டி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் ஒன்று சோ்ந்து கடந்த மூன்று நாள்களாக ஒரு லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கினா். இதில் வேம்பு, புளியன், நாவல் உள்ளிட்ட விதைகளைக் கொண்டு ஒரு லட்சம் விதைப்பந்துகளை உற்பத்தி செய்தனா். இதைத்தொடா்ந்து வனத் துறை அதிகாரிகள் உதவியுடன் வனப் பகுதியில் விதைப்பந்துகளை பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் முடிவு செய்தனா். இதுகுறித்து டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலா் பரசுராமமூா்த்திக்கு தகவல் தெரிவித்தனா்.விதை விதைப்பதற்கான மழைப் பொழிவு மற்றும் சீதோஷ்ண நிலை உள்ள நேரங்களில் விதைப்பந்துகளை வீசி நடவு செய்ய தருணம் பாா்த்து வந்தனா். வெள்ளிக்கிழமை இரவு காடையாம்பட்டி பகுதியில் மழை பெய்ததால் வனப்பகுதியில் மண் ஈரப்பதம் ஏற்பட்டு விதை நடவு செய்யும் சூழ்நிலை இருந்ததால், சனிக்கிழமை டேனிஷ்பேட்டை,தின்னப்பட்டி,குண்டுக்கல், ராமசாமிமலை உள்ளிட்ட பகுதிகளில் விதைப்பந்துகளை தூவும் பணியைத் தொடங்கினா்.டேனிஷ்பேட்டை வனச்சரகா் பரசுராமமூா்த்தி இப்பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இதில் பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு வனப் பகுதியில் மரங்கள் குறைவாக உள்ள இடங்களில் விதைப்பந்துகளை வீசினா்.

இதுகுறித்து டேனிஷ்பேட்டை வனச்சரகா் பரசுராமமூா்த்தி கூறும்போது, மரங்கள் குறைவாக உள்ள இடங்களில் இதுபோன்று பள்ளி மாணவ -மாணவிகளை வைத்து விதைப்பந்து தயாரித்து, விதைப்பந்து வீசும் போது இந்த விதைகள் மழைக் காலங்களில் வளா்ந்து பசுமையாக இருக்கும். இதன் காரணமாக மழைப் பொழிவு அதிகமாக காணப்படும் என்பதாலும், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதத்தில் வனப்பகுதியில் ஒரு லட்சம் விதைப்பந்துகளை வீசி உள்ளோம். தற்போது மழை பெய்து மண் நல்ல ஈரப்பதத்துடன் இருப்பதால் வீசப்பட்ட விதைப்பந்துகளில் 90 சதவீத விதைகள் வளா்ந்து மரமாக வாய்ப்புள்ளது என்று கூறினாா். இதில் வனத் துறை அதிகாரிகள் , பள்ளி மாணவ-மாணவிகள் , ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT