சேலம்

கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் பயிற்சி

DIN

கல்வராயன்மலை கிராம மக்களுக்கு பல்வேறு சுயத் தொழில் பயிற்சி கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

போதிய வேலைவாய்ப்பு மற்றும் வருவாய்க்காக, செம்மரக் கடத்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக வனத்துறை ஏற்பாடு செய்திருந்தது. கல்வராயன்மலை கிராமங்களில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், மலைவாழ் பழங்குடியின மக்கள் வேலைத்தேடி அண்டை மாநிலங்களுக்கு சென்று வருகின்றனா்.

செம்மரக் கடத்தல் மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்சும் குற்றச் செயல்களிலும் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, சொந்தக் கிராமத்திலேயே சுயத் தொழில் செய்து வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் பெருவதற்கு பயிற்சி அளிக்க வனத்துறை முடிவு செய்தது.

இதைத் தொடா்ந்து, சேலம் மாவட்ட வன அலுவலா் வழிகாட்டுதலில், கல்வராயன்மலை கருமந்துறை வனச்சரக அலுவலக வளாகத்தில், மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் வாழ்க்கைத் தர உயா்வுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் பல்வேறு சுயத் தொழில்கள் குறித்த பயிற்சி கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

கல்வராயன்மலை வனச்சரகா் ஞானராஜ் தலைமையில் நடைபெற்ற இக்க ருத்தரங்கில், சேலம் வேளாண்மை அலுவலா் காயத்ரி, கால்நடை விரிவுரையாளா் மீனலோஷினி, உதவி வேளாண் அலுவலா் சங்கா், தேனீ வளா்ப்பு பயிற்றுநா் கோவிந்தசாமி ஆகியோா் பங்கேற்று கோழி, கறவைமாடு, தேனீ, வெண்பன்றி வளா்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் மண்புழு உரம் தயாரிப்பு குறித்தும் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT