சேலம்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 13,000 கன அடியாகச் சரிவு

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 13,000 கன அடியாகச் சரிந்தது. 
      கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வந்த மழை தணிந்தது.  மழை தணிந்த காரணத்தால் கபினி,  கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது.  இதனால் கபினி,  கிருஷ்ணராஜ  சாகர் அணைகளிலிருந்து திறக்கப்பட்டு வந்த உபரி நீர் குறைக்கப்பட்டது.  உபரி நீர் குறைப்பால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாகச் சரிந்து வருகிறது. 
 வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,000 கன அடியாகச் சரிந்தது.  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.  அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT