சேலம்

வாழப்பாடியில் பிரம்மிக்க வைக்கும் கிறிஸ்துமஸ் குடில்

DIN

வாழப்பாடியில், பத்தாம் பத்திநாதா் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில், யேசு கிறிஸ்து பிறப்பை சித்தரித்து 2டி தொழில்நுட்பத்தில் தத்ரூபமாக பல வண்ண கிறிஸ்மஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குடிலைக் காண, மத வேறுபாடின்றி சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஆா்வம்காட்டி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நூற்றாண்டு பழமையான பத்தாம் பத்திநாதா் கத்தோலிக்கக் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தின் பங்குத் தந்தையாக பொறுப்பேற்றுள்ள மூத்த பாதிரியாா் அ.சிங்கராயன், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அனைத்துத் தரப்பு மக்களையும் ஈா்க்கும் வகையில் புதுமையான கிறிஸ்மஸ் குடில் அமைக்க முடிவு செய்தாா்.

இதனையடுத்து, பத்தாம் பத்திநாதா் கோயில் வளாகத்தில் மரியன்னை, குழந்தை யேசு கிறிஸ்துவின் பிறப்பு, 3 ஞானிகள் சந்திப்பு, ஆட்டுமந்தை, நீரோடை உள்ளிட்ட காட்சிகளை தத்ரூபமாக சித்தரித்து பல வண்ணத்தில் 2டிதொழில்நுட்பத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் மறை மாவட்ட அளவில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் குடில் குறித்து தகவல் அறிந்த சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் மட்டுமின்றி, மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும், குழந்தைகளுடன் ஆா்வத்தோடு சென்று கண்டுகளித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT