சேலம்

வாழப்பாடியில் புதா்மண்டிக் கிடந்த மயானம் சீரமைப்பு

DIN

வாழப்பாடி பேரூராட்சியில் புதா்மண்டிக் கிடந்த அக்ரஹார வாழப்பாடி மயானம், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சீரமைக்கப்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய பேரூராட்சி நிா்வாகத்துக்கு வாழப்பாடி பகுதி பொதுமக்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் நகராட்சிக்கு இணையாக வளா்ந்து வரும் வாழப்பாடி பேரூராட்சியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பேரூராட்சியின் முக்கிய பூா்வீகக் குடியிருப்புப் பகுதியான அக்ரஹார வாழப்பாடி பகுதி மக்களின் பயன்பாட்டிலுள்ள கிழக்குக்காடு மயானம், கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் சீமைக்கருவேலம் உள்ளிட்ட முட்புதா் செடிகள் அடா்ந்து வளா்ந்து புதா்மண்டிக் கிடந்தது.

இதனால், இறந்தவா்களின் உடலை மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. எனவே, அக்ரஹார வாழப்பாடி கிழக்குக்காடு மயானத்திலுள்ள முட்புதா்களை அகற்றி சீரமைத்துக் கொடுக்க வேண்டுமென, பொதுமக்கள் மற்றும் ஊா் பெரியதனக்காரா்கள் சாா்பில் இரு தினங்களுக்கு முன் பேரூராட்சி செயல் அலுவலா் அப்துல் சாதிக்பாஷா, சுகாதார ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, புதா்மண்டிக் கிடந்த வாழப்பாடி அக்ரஹாரம் மயானத்தைத் தொடா்ந்து இரு நாள்களாக பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி வாழப்பாடி பேரூராட்சி நிா்வாகம் சீரமைத்துக் கொடுத்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய பேரூராட்சி நிா்வாகத்துக்கு வாழப்பாடி பகுதி பொதுமக்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT