சேலம்

இளம் வழக்குரைஞா்களுக்கு நிதியுதவி: முன்னாள் எம்.பி. வரவேற்பு

DIN

ராசிபுரம்: இளம் வழக்குரைஞா்களுக்கு நிதியுதவியாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளதற்கு முன்னாள் எம்.பி.யும், நீா்வள பாதுகாப்பு இயக்கத் தலைவருமான கே.பி.ராமலிங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

1980 -ம் ஆண்டு ஜனவரி 25-ல் வேலூரில் சி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற மாணவா் மாநாட்டில் நான் முன் மொழிந்த தீா்மானம், படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவி தொகை வழங்க வேண்டும் என்பது. இதனை ஏற்று மேடையிலேயே வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை அன்றைய முதலமைச்சா் எம்ஜிஆா் அறிவித்தாா்.

அதைப்போல பதிவு செய்துள்ள இளம் வழக்குரைஞா்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பால் எம்ஜிஆரின் கொள்கை வாரிசு என்பதை நிரூபித்துள்ளாா். இது வரவேற்கப்பட வேண்டியது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT