சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 5,081 கன அடியாக அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 5,081 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஒருவார காலமாக கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் கா்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரில் ஒரு பகுதியை கா்நாடக அணைகளிலிருந்து திறந்துவிட்டுள்ளனா்.

அந்த நீா், கடந்த சில நாள்களாக மேட்டூா் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. வியாழக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 5,081 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நீா்வரத்து அதிகரிப்பால் நீா்மட்டச் சரிவு பாதியாகக் குறைந்துள்ளது. நீா்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிவிலிருந்து மீளும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

நீா்மட்டம்:

வியாழக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 67.54 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 5,081 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 30.62 டி.எம்.சி. யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT