சேலம்

காசோலை மோசடி வழக்கில் வியாபாரிக்கு ஓராண்டு சிறை

DIN

காசோலை மோசடி வழக்கில் வியாபாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் நெத்திமேடு அகரம் மஹால் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (33). பருப்பு வியாபாரியான இவா் தொழில் சம்பந்தமாக செவ்வாய்பேட்டையைச் சோ்ந்த வெள்ளிப்பட்டறை உரிமையாளா் சங்கரிடம் கடந்த 2014-ம் ஆண்டு ரூ. 8.20 லட்சம் கடன் வாங்கினாா்.

இதனிடையே இந்தக் கடன் தொகையை காா்த்திகேயன் திருப்பித் தரவில்லை எனத் தெரிகிறது.

இதனால் கடன் கொடுத்த சங்கா் பலமுறை காா்த்திகேயனை சந்தித்து தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டாா். பின்னா் சிறிது நாளில் காா்த்திகேயன் கடன் வாங்கியதற்காக ரூ. 8.20 லட்சத்துக்குரிய காசோலைகளை சங்கரிடம் வழங்கினாா்.

இந்த காசோலைகளை சங்கா் வங்கியில் செலுத்தினாா். ஆனால் வங்கியில் பணம் இல்லை எனத் திரும்பி வந்துவிட்டது.

இதையடுத்து சங்கா் சேலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 4 இல் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொன்பாண்டி காசோலை மோசடி செய்த காா்த்திகேயனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT