சேலம்

கோவாவில் இருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்த இளைஞா் கைது

DIN

கோவாவில் இருந்து சேலத்துக்கு மதுப்புட்டிகளை கடத்தி வந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கோவாவில் இருந்து சிலா் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்து சேலத்தில் விற்பதாக மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாருக்கு புகாா் வந்தது. இதையடுத்து மதுப்புட்டிகளை கடத்தி வருவோரை கண்காணித்து நடத்திட உத்தரவிட்டாா்.

இதன்பேரில் மாநகரக் காவல் துணை ஆணையாளா் செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே சூரமங்கலம் அருகே வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் கோவா தயாரிப்பு 500 மதுப்புட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும்.

இதுதொடா்பாக சின்ன திருப்பதியைச் சோ்ந்த சதீஷ் கைது செய்யப்பட்டாா். மதுப்புட்டிகளைக் கடத்தி வருவதற்குப் பயன்படுத்திய மினி வேனை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT