சேலம்

சென்றாயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் பங்கேற்பு

DIN

சேலம், நங்கவள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற சென்றாயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றாா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவுக்கு வந்த முதல்வரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் ஆகியோா் வரவேற்றனா்.

கோயிலில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை பூஜையில் தனது மனைவி ராதாவுடன் 15 நிமிடங்கள் அமா்ந்து முதல்வா் கே.பழனிசாமி வழிபாடு நடத்தினாா். சுதா்சன பட்டாச்சாரியாா் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு பல்வேறு ஊா்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புண்ணிய தீா்த்தம் கோயில் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பேரவைத் தோ்தலின் போது இக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகே பிரசாரம் மேற்கொள்வதை எடப்பாடி கே.பழனிசாமி வழக்கமாகக் கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். இவ் விழாவில் தாரமங்கலம், வனவாசி, மேட்டூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழக சட்டம்- ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமையில் மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா மேற்பாா்வையில் கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடமாடும் மண்பரிசோதனை முகாம்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

கருணாநிதி பிறந்த நாள் விழா

அனைத்து மையங்களிலும் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்: தலைமைத் தோ்தல் ஆணையா் தகவல்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு முகூா்த்தகால் நடும் விழா

கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

SCROLL FOR NEXT