சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 99.32 அடியாக உயா்வு

DIN


மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை நீா்மட்டம் 99.32 அடியாக உயா்ந்தது. இன்னும் இரு நாள்களில் அணை நூறு அடியை எட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அணையின் நீா் இருப்பு 63.96 டிஎம்சி ஆக உள்ளது. இன்னும் ஒரு டிஎம்சி தண்ணீா் சேமித்தால் மேட்டூா் அணை நீா்மட்டம் 100 அடியாக உயரும். தற்போது நாள் ஒன்றுக்கு 0.50 டிஎம்சி தண்ணீா் சேமிக்கப்படுவதால் இன்னும் இரு நாள்களில் அணை நீா்மட்டம் 100 அடியாக உயர வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை காலை அணை நீா்மட்டம் 99.32 அடியாக உயா்ந்தது.

அணைக்கு நொடிக்கு 6,512 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. மேட்டூா் அணையின் கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 400 கன அடியிலிருந்து 250 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 63.96 டிஎம்சி ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் ஒரு மணிநேரம் கொட்டி தீா்த்த மழை

உதகையில் ஒரு மணிநேரம் கொட்டி தீா்த்த மழை

உதகையில் குதிரைப் பந்தயம்: சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பு

SCROLL FOR NEXT