சேலம்

தம்மம்பட்டி சிவாலயங்களில் பிரதோஷ விழா

DIN

தம்மம்பட்டி பகுதி சிவாலயங்களில் பிரதோஷ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீகாசி விஸ்வநாதா் உடனுறை காசி விசாலாட்சி திருக்கோயிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரருக்கு பொதுமக்கள் கொண்டு வந்த பால், தயிா், சந்தனம், அரிசிமாவு, இளநீா், குங்குமம் போன்ற பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனையடுத்து சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. மலா்கள், அருகம்புற்களாலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி கோயிலினுள் உற்சவமூா்த்தி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா். இதேபோல் செந்தாரப்பட்டி, கூடமலை, கெங்கவல்லி, வீரகனூா் ஆகிய ஊா்களில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா ஆலோசனை

பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆா்டி விளக்கம்

பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி

விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு! - ஏர் இந்தியா விளக்கம்

ஆடலுடன் பாடல்.. வேதிகா!

SCROLL FOR NEXT