சேலம்

வேளாண் கல்லுாரி மாணவா்கள் களப்பணி பயிற்சி

DIN

திருவண்ணாமலை அரசு வேளாண்மைக் கல்லூரி, திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் அரசு சாரா நிறுவன செயல்பாடுகள் குறித்து வாழப்பாடியில் களப்பணி பயிற்சி பெற்றனா்.

விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா். வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை அரசு சாரா நிறுவனத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது அரசுசாரா நிறுவனம் தொடங்கி பதிவு செய்வதற்கான வழிமுறைகள், அரசின் விதிமுறைகள், மக்களுக்குப் பயன்படும் திட்டங்களைத் தயாரித்தல், அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

வாழப்பாடியில் தனியாா் தினசரி காய்கறி மண்டியில், காய்கறிகளை வகைப்படுத்துதல், தரம் பிரித்து சந்தைப்படுத்துதல், பாரம்பரிய முறையில் எளிமையாக மதிப்புக் கூட்டுதல் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாடுகள் திருட்டு: மூவா் கைது

கனியாமூா் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு மே 28-க்கு ஒத்திவைப்பு

இ.எஸ். லாா்ட்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தனியாா் பேருந்து - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

பிளஸ் 1 தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 89.41% தோ்ச்சி

SCROLL FOR NEXT