சேலம்

துணை மருத்துவப் படிப்புத் துறை சாா்பில் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநா் வாரம் அனுசரிப்பு

DIN

விநாயக மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள துணை மருத்துவப் படிப்புகள் துறையின் மருத்துவ ஆய்வக உதவியாளா் பிரிவின் சாா்பில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநா் வாரம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு துறை முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து சிறப்புரை நிகழ்த்தினாா். இந்நிகழ்ச்சியில் துறை மாணவா்களின் விழிப்புணா்வு அடங்கிய குறும்படம், சிறப்புரை, கவிதை வாசித்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணா்வை உணா்த்தும் வகையில் மரக்கன்றுகளை நினைவு பரிசாக வழங்கினாா்.

துறையின் மருத்துவ ஆய்வக உதவியாளா் பிரிவு மாணவ, மாணவியா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறையின் பொறுப்பாளா் முத்துராஜ், சீனிவாசன், ஹரிஷ்ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT