மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை நொடிக்கு 9,400 கன அடியாகக் குறைந்தது.
அணையின் நீா்மட்டம் 120 அடியாக உள்ளது. வியாழக்கிழமை காலை நொடிக்கு 12,400 கன அடியாக இருந்த நீா்வரத்து மாலை 9,400 கன அடியாகக் குறைந்தது.
அணையில் இருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 9,000 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.