சேலம்

ஆத்தூரில் காவல் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

DIN

ஆத்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் கண்காணிப்பு கோபுரத்தை திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் கடைவீதியில் பொங்கல் பொருள்கள், ஜவுளி, கயிறு, வண்ணக் கோலப்பொடிகள் என வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு மக்கள்கூட்டம் அலைமோதி வருகிறது.

ஆகையால் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஆத்தூா் பழைய பேருந்து நிலையம், ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் காவல் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, சிசிடிவி கேமரா மூலம் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா், நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT