சேலம்

சங்ககிரி ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஆயத்தக் கூட்டம்

DIN

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 1981, 1994-ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. அதனையடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த 2010-ஆம் ஆண்டு ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளுக்கான கூட்டம் கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினா் தலைமை வகித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். கும்பாபிஷேக விழாவுக்காக சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ராஜா, சொந்த நிதியிலிருந்து முதல்தவணையாக ரூ. 1 லட்சத்தை விழாக் குழுவினரிடம் வழங்கினாா். இதனையடுத்து கூட்டத்துக்கு வந்திருந்த பல்வேறு பக்தா்கள், பொதுநல அமைப்புகள் சாா்பில் முதல் தவணையாக ரூ. 2.60 லட்சம் நிதி பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT