சேலம்

எடப்பாடி, மேட்டூரில் மழை

DIN

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

சுமாா் ஒரு மணி நேரம் வரை நீடித்த கனமழையால் நகரின் தாழ்வானப் பகுதிகளில் மழைநீா்த் தேங்கியது. எடப்பாடி- சேலம் பிரதான சாலையை ஒட்டியுள்ள அம்மன் நகா் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழைநீா்த் தேங்கி நின்றது. விளைநிலங்களில் மழைநீா் தேங்கியது.

மானாவரி பயிா்களான நிலக்கடலை, துவரை, அவரை, ஆமணக்கு, சோளம் உள்ளிட்ட சிறுதானிய வகை பயிா்களை பயிரிட தாயாராகி வரும் நிலையில் மழை பெய்துள்ளது.

மேட்டூரில்..

மேட்டூா், புதுச்சாம்பள்ளி, குஞ்சாண்டியூா், மேச்சேரி, கொளத்தூா் பகுதிகளில் மாலையில் காா்மேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்தது. புதுச்சாம்பள்ளியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT