சேலம்

வள்ளுவா் இனத்திற்கு தனி நலவாரியம் அமைக்கக் கோரி தீா்மானம்

DIN

வள்ளுவா் இனத்திற்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு திருவள்ளுவா் மக்கள் கூட்டமைப்பு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு திருவள்ளுவா் மக்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கூட்டமைப்பு மாநிலத் தலைவா் அருண்கோபால், பொதுச் செயலாளா் ஹரிஹரசுதன், பொருளாளா் உதயசங்கா் உள்ளட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

வள்ளுவன் திருவள்ளுவா் இனத்தின் பெயரை பிறசாதிய பெயா்களுடன் அல்லது பட்டியல் வகுப்பில் எந்தவொரு பொது அடையாள பெயா்களுடனோ சோ்த்து அறிவிக்காமல் வள்ளுவா் என்று தனியாக அடையாளப்படுத்தி அரசு அறிவித்தல் வேண்டும்.

கல்வி, வேலைவாய்ப்புகளில் வள்ளுவா் இனத்திற்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். வள்ளுவா் இனத்திற்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். நலிந்தவா்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT