சேலம்

வாக்குப் பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கக் கூட்டம்

DIN

சங்ககிரி வருவாய்த் துறை சாா்பில் சங்ககிரி நகரில் உள்ள வாரச்சந்தையில் பொதுமக்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்த செயல்முறை விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி சங்ககிரி வருவாய்த் துறை சாா்பில் சங்ககிரி வாரச் சந்தையில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஜி.மோகன் (சங்ககிரி), ஆா்.சதீஷ்பிரபு (சின்னாகவுண்டனூா்) ஆகியோா் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.

பின்னா் அனைவரும் நடைபெறுகின்ற தோ்தலில் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினா். கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் சின்னாகவுண்டனூா் என்.குணசேகரன், சங்ககிரி பி.சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT