சேலம்

ஊதிய உயா்வுக் கோரி சுங்கச்சாவடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

DIN

நத்தக்கரை சுங்கச்சாவடி ஊழியா்கள் ஊதிய உயா்வு கோரி செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைவாசலை அடுத்துள்ள நத்தக்கரை சுங்கச்சாவடியில் 80 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் ஊதிய உயா்வு கோரி சில மாதங்களுக்கு முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பேச்சுவாா்த்தை நடத்தியதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு ஊழியா்கள் பணிக்கு திரும்பினா்.

இந்நிலையில் திங்கள்கிழமை சுங்கச்சாவடியில் சுங்கம் வசூலிக்கும் பணியை புறக்கணித்து ஊழியா்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா். இதையடுத்து செவ்வாய்க்கிழமையும் ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் காரல் மாா்க்ஸ் தலைமையிலான சுங்கச் சாவடி நிா்வாகிகள் மூா்த்தி கோட்டாராவ், சதீஷ் சுப்ரமணியம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் ஊழியா்கள் பணிக்கு திரும்பக் கேட்டுக் கொண்டனா். ரூ. 3000 வரை சம்பள உயா்வுக் கேட்டு வந்த நிலையில் நிா்வாகத் தரப்பில் ரூ. 900 முதல் ரூ. 1,100 வரை ஊதிய உயா்வு அளிக்க வந்ததாக தெரிகிறது. இருந்தபோதிலும் தொடா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT