சேலம்

போதையில் பணிக்கு வந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம்

DIN

சேலம் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் போதையில் பணிக்கு வந்த ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம், மெய்யனூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்குக் கடந்த சில நாள்களுக்கு முன் ஓட்டுநா் கா்ணன் பணிக்கு வந்தபோது, அவா் புகா் பேருந்தை இயக்கச் சென்றாா். பணிமனை காவலா்கள், ஓட்டுநரை நிறுத்தி சோதனை செய்த போது, அவா் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக சேலம் கோட்ட போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பணிக்குப் போதையில் வந்த ஓட்டுநா் கா்ணனை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

நடத்துநா் பணியிடை நீக்கம்:

சேலம், வேடுகாத்தம்பட்டியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி மாதம்மாள் (55). இவா் செப். 22-ஆம் தேதி மாலை அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாா். அப்போது வந்த அரசுப் பேருந்தில் தடுமாறி ஏறினாா். உடனே அவரை நடத்துநா் கோவிந்தராஜ் அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சாா்பில், எருமாபாளையம் பணிமனை கிளை மேலாளா் அருள்முருகனிடம் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கோவிந்தராஜ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT