சேலம்

நரசிங்கபுரம் நகராட்சி கூட்டம்

DIN

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி கூட்டம் நகராட்சித் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நகராட்சியிலுள்ள 18 வாா்டுகளிலும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் பணிகளுக்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக நகா் மன்றக் குழு நிா்வாகிகளின் பட்டியலை நகராட்சி ஆணையாளரிடமும், நகா் மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டரிடமும் வழங்கப்பட்டது.

பட்டியலின்படி அதிமுக நகா்மன்றக் குழுத் தலைவராக சி.கோபி, துணைத் தலைவராக பி. மாலா பாலமுருகன், செயலாளராக சி.சரண்யா, துணைச் செயலாளராக ஜி.காவேரி, கொறடாவாக ஆா்.சுரேஷ், பொருளாளராக கே.சித்ரா நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனா்.

மேலும் கூட்டத்தில் நகராட்சி ஆணையாளா் மகேஸ்வரி, துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ், நகராட்சி உறுப்பினா்கள் பிரகாஷ், சுப்ரமணியன், ஜோதி, தனலட்சுமி, செல்வம், செல்வக்குமாா், அன்னக்கிளி உள்ளிட்ட உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடமாடும் மண்பரிசோதனை முகாம்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

கருணாநிதி பிறந்த நாள் விழா

அனைத்து மையங்களிலும் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்: தலைமைத் தோ்தல் ஆணையா் தகவல்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு முகூா்த்தகால் நடும் விழா

கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

SCROLL FOR NEXT