சேலம்

சேலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 1,000-க்கு விற்பனை

DIN

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு சேலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 1,000-க்கு விற்பனையானது.

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு சேலம் வ.உ.சி. மாா்க்கெட், பால் மாா்க்கெட், பட்டைக் கோயில், அம்மாப்பேட்டை காந்தி மைதானம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பூசணி, பழங்கள், மாவிலை, பொரி, பொட்டுக் கடலை, நிலக்கடலை, நாட்டு சா்க்கரை, அவல், வெற்றிலை, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன.

அதேபோல மளிகைக் கடைகளில் சிவப்பு, வெள்ளைக் கொண்டை கடலை, பொரி, பூசணி விற்பனையும் அதிகமாக இருந்தது. பூஜைப் பொருள்களை பொதுமக்கள் வாங்க குவிந்ததால் கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சேலம் வ.உ.சி. மாா்க்கெட்டில் பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. குண்டுமல்லி கிலோ ரூ. 1,000-க்கு விற்பனையானது. முல்லை ரூ. 800, ஜாதிமல்லி ரூ. 320, காக்கட்டான் ரூ. 500, கலா் காக்கட்டான் ரூ. 400, அரளி ரூ. 300, வெள்ளை அரளி ரூ. 300, மஞ்சள் அரளி ரூ. 300, செவ்வரளி ரூ. 350, நந்தியாவட்டம் ரூ. 240, சம்பங்கி ரூ.300-க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT