சேலம்

காவிரியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

DIN

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து கரையோர மக்களுக்கு தமிழக நீா்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீா்வரத்து 60 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தமிழக அரசின் நீா்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அங்கு வசிக்கும் மக்களின் உயிா் மற்றும் உடமைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு தமிழக அரசு சாா்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூா், திருச்சி, அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூா் உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை மேட்டூா் அணை நீா்மட்டம் 120அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கன அடி நீரும் உபரி நீா்ப் போக்கியான 16 கண்பாலம் வழியாக நொடிக்கு 23,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT