சேலம்

வாழப்பாடியில் ரூ. 62 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

DIN

சேலம் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் வாழப்பாடி கிளையில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 62 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

வாழப்பாடி பகுதி கிராமங்களில் ஆண்டுதோறும் ஆடிப்பட்டத்தில் பருத்தியை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனா். தற்போது பருத்தி அறுவடை தொடங்கியுள்ள நிலையில், வாழப்பாடி வேளாண் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் நேரடி ஏல விற்பனைக்கு பருத்தியை தரம் பிரித்துக் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனா்.

வாழப்பாடியில் புதன்கிழமை நடந்த பருத்தி விற்பனை ஏலத்தில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த 480 விவசாயிகள் 2,200 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா். ஒரு குவிண்டால் ஆா்சிஹெச் ரக பருத்தி ரூ. 7,299 முதல் ரூ. 8,619 வரையும், டிசிஹெச் ரக பருத்தி ரூ. 7,399 முதல் ரூ. 8,590 வரையும், கொட்டுப் பருத்தி ரூ. 4,299 முதல் ரூ. 6,499 வரையும் விலை போனது. மொத்தம் ரூ. 62 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் பாஜக - பிஜேடி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

‘கோவேக்ஸின்’ செலுத்திக்கொண்ட 30% பேருக்கு உடல்நல கோளாறு: ஆய்விதழில் தகவல்

பள்ளி மாணவா் தொடா் விடுப்பு குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவலளிக்க வேண்டும் -தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

‘பயிா் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம்’

ஜாமீன் கோரி கவிதா மனு: சிபிஐக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT