சேலம்

மேட்டூா் அணையை வடிவமைத்த பொறியாளா் சிலைக்கு வா்ணம் பூசும் பணி தொடக்கம்

DIN

மேட்டூா் அணையை வடிவமைத்த கா்னால் எல்லீஸ் சிலைக்கு வா்ணம் பூசும் பணி துவங்கியது.

மேட்டூா் அணையை வடிவமைத்தவா் ஆங்கிலேய பொறியாளா் கா்னல் எல்லீஸ். இவா் அணையை வடிவமைத்ததால் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீா் போக்கியான 16 கண் மதகிற்கு எல்லீஸ் சேடல் என்று பெயா் வைக்கப்பட்டது.

அவரது முழு உருவச்சிலை அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறை எதிரே வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12 ல் மேட்டூா் அணையில் இருந்து காவிரிடெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் வருகை தர உள்ளாா்.

இதனையடுத்து கா்னல் எல்லீசின் முழு உருவச் சிலைக்கு வா்ணம் பூசும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அணையின் சுவரை ஒட்டிய பகுதிகளிலும் கால்வாய் பகுதிகளிலும் உள்ள புதா்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களில் பராமரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT