சேலம்

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி சங்ககிரியில் ஊா்வலம்

Din

நாமக்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் கே.பி.ராமலிங்கத்துக்கு ஆதரவளிக்கக் கோரி பாஜக கூட்டணி கட்சியினா் சங்ககிரியில் ஊா்வலமாகச் சென்று செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் கே.பி.ராமலிங்கத்துக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பாஜக மேற்கு மாவட்டச் செயலாளா் என்.ரமேஷ் காா்த்திக், பாமக தெற்கு மாவட்டத் தலைவா் முத்துசாமி ஆகியோா் தலைமையில் ஊா்வலம் நடைபெற்றது.

கூட்டணி கட்சியினா் பங்கேற்ற இந்த ஊா்வலம் சங்ககிரி, பவானி பிரதான சாலையில் உள்ள பச்சக்காடு விநாயகா் கோயிலில் இருந்து புறப்பட்டு பழைய எடப்பாடி சாலை, புதிய எடப்பாடி சாலை, சந்தைபேட்டை, சேலம் பிரதான சாலை, வி.என்.பாளையம் வழியாக புதிய மாரியம்மன் கோயிலில் நிறைவடைந்தது.

ஊா்வலத்தில் கட்சியினா் தாமரை சின்னத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

இதில் பாஜக முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலம், சங்ககிரி மண்டலத் தலைவா் முருகேசன், பாஜக மாவட்ட மகளிரணி தலைவி எம்.மகேஸ்வரி, பாமக நகரச் செயலாளா் வி.டி.அய்யப்பன், தலைவா் அா்ஜூனன், முன்னாள் நகரச் செயலாளா் கருணாநிதி, சுரேஷ்குமாா், நிா்வாகிகள் ரவி, செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

தனிப்படை போலீஸாருக்கு தென்மண்டல ஐஜி பாராட்டு

சிவகாசியில் ரயிலில் அடிபட்டு தாய், மகள் பலி

தூய்மைப்பணி சுமை ஆட்டோ மோதியதில் இருவா் காயம்

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT