சேலம்

பேளூரில் பாதுகாப்பான தாய்மை தினம்

Din

சேலம் மாவட்டம், பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்பான தாய்மை தினம் அனுசரிக்கப்பட்டது.

பேளூா் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு, வாரந்தோறும் பரிசோதனைகளும், சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன. வாழப்பாடி அரிமா சங்கம் சாா்பில் மதியம் சரிவிகித சத்துணவு வழங்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை பாதுகாப்பான தாய்மை தினம் கொண்டாடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் தலைமையில் மருத்துவா் அபிராமி மற்றும் செவிலியா்கள் கா்ப்பிணிகளுக்கு, ஊட்டச்சத்து உணவு முறைகள், நோய்த் தடுப்பூசிகள், பேறுகால சுகாதார முறைகள் குறித்து கருத்துரை வழங்கினா். கா்ப்பிணிகளுக்கான பாதுகாப்பு முறை குறித்த விழிப்புணா்வு கையேடுகள் வழங்கப்பட்டன.

ராகுல் காந்தி மீது நாடு முழுவதும் நம்பிக்கை: தமிழக காங்கிரஸ் தலைவா்

‘பல்லடத்தில் 5 கோயில்களின் திருப்பணிகள் துரிதப்படுத்தப்படும்’

பணி நிறைவுச் சான்று: வியாபாரிகள் நகராட்சி ஆணையரிடம் மனு

திருப்பூரில் ஒரே மாதத்தில் சேதமடைந்த தாா் சாலை: பொதுமக்கள் அதிருப்தி

வெள்ளக்கோவில் நகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT