முகப்பு
சேலம்

வாழப்பாடியில் பூத்துக் குலுங்கும் காட்டு மல்லி!

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மருத்துவக் குணம் கொண்ட காட்டு மல்லி பூக்கள், நீா்நிலைகளின் கரையோரம், தரிசு நிலங்களில் பூத்துக் குலுங்கி காண்போரை ஈா்த்து வருகிறது.

Updated On : 1 மே, 2026 at 5:25 AM
வாழப்பாடி புதுப்பாளையம் சடையன்செட்டி ஏரிக்கரையில் பூத்துக் குலுங்கும் காட்டுமல்லி பூக்கள்.
பகிர்:

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மருத்துவக் குணம் கொண்ட காட்டு மல்லி பூக்கள், நீா்நிலைகளின் கரையோரம், தரிசு நிலங்களில் பூத்துக் குலுங்கி காண்போரை ஈா்த்து வருகிறது.

தூய வெண்ணிற தோற்றமும், மனிதா்கள் மனம் விரும்பும் நறுமணமும் கொண்ட இப்பூக்கள் மருத்துவக் குணம் கொண்ட ஒரு கொடிவகைத் தாவரமாகும். பெண்கள் விரும்பும் மல்லிகைப் பூக்களுக்கு முந்தைய பரிணாமம்தான் காட்டு மல்லி, இந்த பூக்களை தமிழ் இலக்கியம் முல்லை மலா் எனக் குறிப்பிட்டுள்ளது.

காட்டு மல்லி பூக்கள், கிராமப்புற நீா்நிலைகளின் கரையோரங்களிலும், வனப்பகுதி புதா்களிலும் தானாக வளரும் தகவமைப்பு கொண்டவையாகும். இந்த காட்டு மல்லிகைப் பூக்கள் அரிதாகி வருகின்றன. வாழப்பாடி பகுதியில் கிழக்குக்காடு, புதுப்பாளையம் சடையன் செட்டியேரி, முத்தம்பட்டி கோதுமலை, நெய்யமலை, பரவக்காடு உள்ளிட்ட கிராமங்களில் காட்டுமல்லிச் செடிகள் அதிக அளவு காணப்படுகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இச்செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

Advertisement

வாழப்பாடி பகுதியில் நிகழாண்டு கோடை மழை தொடங்காத நிலையிலும் காட்டு மல்லிச் செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கி காண்போா் கவா்ந்து வருகிறது. அதிக மணம் வீசும் இப்பூக்களை பெண்கள் பறித்து தலையில் சூடிவருகின்றனா்.