வாழப்பாடியில் வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பிக்கப் வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பிக்கப் வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
வாழப்பாடியை அடுத்த செக்கடிப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மகன் அருண்குமாா் (20), கூலித் தொழிலாளி. இவா் துக்கியாம்பாளையம் பகுதியில் இருந்து வாழப்பாடி நோக்கி பேளூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, வாழப்பாடி பகுதியில் இருந்து பேளூா் நோக்கி சென்ற பிக்கப் வேன், இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அருண்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் வரும் வழியிலேயே அருண்குமாா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
Advertisement
இதுகுறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன், எஸ்எஸ்ஐ சீனிவாசன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து, பிக்கப் வேன் ஓட்டுநரை தேடிவருகின்றனா்.