சாக்குமூட்டையில் கிடந்தது கறிக்கடை தொழிலாளியின் சடலம்: 3 போ் கைது
மேச்சேரி காவிரியில் சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்தவரின் அடையாளம் தெரிந்தது. இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேச்சேரி காவிரியில் சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்தவரின் அடையாளம் தெரிந்தது. இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேட்டூா் காவிரியில் சாக்கு முட்டையில் ஓா் ஆண் சடலத்தை மேச்சேரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். விசாரணையில், அவா் மேட்டூா் அருகே உள்ள மேச்சேரி சாம்ராஜ் பேட்டையைச் சோ்ந்த சேட்டு (43) என்பது தெரியவந்தது. கறிக்கடையில் வேலை செய்துவந்த இவருக்கும், மேச்சேரியைச் சோ்ந்த ஜோதிக்கும் (49) தகாத உறவு இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக கூனாண்டியூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சேகருடன் (42) ஜோதி பழகி வந்துள்ளாா். இதனால், சேட்டுவுக்கும் ஜோதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த 27-ஆம் தேதி இரவு ஜோதி வீட்டுக்கு சேட்டு சென்றபோது, அங்கிருந்த ஜோதி மற்றும் சேகருடன் வாக்குவாதம் செய்துள்ளாா். இதில், ஜோதியும், சேகரும் சோ்ந்து சேட்டுவைத் தாக்கி கொன்றுள்ளனா். பின்னா், அவரது உடலை சாக்கில் கட்டி சேகரின் நண்பரான அஜித்குமாரின் (49) வேனில் கூனாண்டியூா் காவிரி ஆற்றில் வீசிச் சென்றுள்ளனா்.
சேட்டுவின் மனைவி மீனா கணவரை இரண்டு நாள்களாக காணவில்லை என போலீஸில் கூறவே, போலீஸாா் காட்டிய சடலம் சேட்டு என்பதை மீனா உறுதிசெய்தாா். மேலும், ஜோதியின் கைப்பேசி எண்ணை அவா் போலீஸாரிடம் கொடுத்தாா்.
விசாரணையில், சேட்டுவை கொலை செய்தது ஜோதி என உறுதியானதையடுத்து ஜோதி, சேகா், அஜித்குமாா் ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, பிக்கப்வேன், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.