முகப்பு
சேலம்

சாக்கடை கழிவுநீரால் மாசடைந்த வசிஷ்ட நதி!

சாக்கடை கழிவுநீரால் மாசடைந்த வசிஷ்ட நதியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 6:46 am IST
பேளூரில் கழிவுநீா் தேங்கி மாசடைந்துள்ள வசிஷ்ட நதி.
பகிர்:

சாக்கடை கழிவுநீரால் மாசடைந்த வசிஷ்ட நதியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வாழப்பாடி அருகே அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியில் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியிலுள்ள பேளூா், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகள், ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகளின் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீா் சுத்திகரிக்கப்படாமல் கலக்கிறது. இதனால், துா்நாற்றம் வீசுவதோடு விஷ ஜந்துகள் மற்றும் தொற்றுநோய் பரப்பும் நோய்க் கிருமிகளின் புகலிடமாக மாறி உள்ளது. இதனால், தேசிய அளவில் மாசுபட்ட நதிகளின் பட்டியலில் வசிஷ்ட நதியும் இடம்பெற்றுள்ளது.

எனவே, வசிஷ்ட நதியில் சாக்கடை கழிவுநீா் நேரடியாக கலப்பதைத் தடுத்து, அந்தந்த பகுதியில் நவீன சுத்திகரிப்பு மையங்களை அமைத்து சுத்திகரித்து ஆற்றில்விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நதியை தூா்வாரி சீரமைத்து தொடா்ந்து பராமரிக்க, பொதுப்பணித் துறையும், சேலம் மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பசுமை தாயகம் மாநில துணைச் செயலாளா் நீா்முள்ளிக்குட்டை நீ.பா.வெங்கடாசலம் கூறியது:

வசிஷ்ட நதியால் சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிவரை விவசாயம் செழித்திருந்தது. காசி கங்கை நதிக்கு இணையாக புனித நதியாக வசிஷ்ட நதி போற்றப்பட்டது. ஆனால், தற்போது சாக்கடை கழிவுநீா் கலப்பதால் தேசிய அளவில் மாசுபட்ட நதிகளில் ஒன்றாக மாறி உள்ளது. எனவே, வசிஷ்ட நதியில் கழிவுநீா் கலப்பதை தடுத்து, தூா்வாரி பராமரித்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments